பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. ஐபிஎல் 14 வது சீசனின் 32வது போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான 4 போட்டிகளில் ராயல்ஸ் தோல்வியடைந்தது.

அதே நேரத்தில் பஞ்சாப் அணி, டெல்லி அணியை இந்த சீசனில் இரண்டு முறை வீழ்த்தியது. இந்த சீசனில் பஞ்சாப் விளையாடிய 8 போட்டிகளில், மூன்றில் வென்று 5 ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதனால், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று இரு அணியின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

More
>