தேனி மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் குவாரிக்காரர்கள் தாங்களாகவே அனுமதி சீட்டில் சீல் வைத்து கொள்ளும் காட்சி வெளியீடு

தேனி: தேனி மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் அலுவலர்களை போல அவர்களது இருக்கையில் அமர்ந்துகொண்டு குவாரிக்காரர்கள் தாங்களாகவே அனுமதி சீட்டில் சீல் வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், மணல் குவாரிகள் மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் குவாரிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இயங்கும் இந்த அலுவலகம் மூலமாக தான் அனுமதி சீட்டு வழங்கப்படும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

வீடியோ வெளியான சிறிது நேரத்தில் கனிமவளத்துறை உதவியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன் 2 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். குவாரிக்காரர்களிடம் மாதம் தோறும் கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனுமதி சீட்டு அளவுகளை எழுதி சீலிட அனுமதிப்பதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories:

>