2 கட்சிகளிடம் இருந்த வந்த மாநிலங்களவை எம்.பி. பதவிகளை நிராகரித்த நடிகர் சோனு சூட்!!

மும்பை : மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்குமாறு தனக்கு 2 முறை அழைப்பு வந்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனு சூட் பல வழிகளில் மக்களுக்கு பணியாற்றினார். குறிப்பாக திடீர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களை பஸ், ரயில், விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அவர் அனுப்பி வைத்த பணி இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அவர் கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு வேலை பெற்றுத் தரும் பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் 4 நாட்களாக அவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் அவர் ரூ.20 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வருமான வரி சோதனை குறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள சோனு சூட், மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்குமாறு தனக்கு 2 முறை அழைப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2 வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த அழைப்பை தான் நிராகரித்துவிட்டதாகவும் அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தாம் கூறிவிட்டதாக சோனு சூட் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், அவர் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனக்கு அரசியலில் சேர விருப்பமில்லை. நல்ல ஒரு அரசியல்வாதி நல்ல ஒரு தேசத்தை உருவாக்குவார். ஏற்கனவே நிறைய நல்லவர்கள் நாட்டில் உள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் சித்தாந்தங்களைப் பின்பற்றுகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலில் இறங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. எனது பணிகளை மேலும் சிறப்பாக செய்வேன்’ என்று கூறினார்.

Related Stories:

More
>