வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தீவிரம் கூத்தாநல்லூரில் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி-நகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்

மன்னார்குடி : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கூத்தாநல்லூர் நகரத்தில் மேற்கொள்ளப்படும் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணிகளை நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபால் துவக்கி வைத்தார்.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், மழை நீர் வடிவதற்கு ஏதுவாக தெருக்களில் உள்ள வடிகால் வாய்க்கால்களை முழுமையாக சீரமைக்கும் பணிகளை துவக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி 24 வார்டுகளை கொண்ட கூத்தாநல்லூர் நகரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. 4வது வார்டுக்குட்பட்ட ஜன்னத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபால் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

சுகாதார ஆய்வாளர் அருண்குமார், துப்புரவு பணிகள் மேற்பார்வையாளர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இப்பணிகளில் சுமார் 25 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>