கமல்-இளையராஜா திடீர் சந்திப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனும் இசை அமைப்பாளர் இளையராஜாவும் திடீரென நேற்று சந்தித்து பேசினார்கள். கமல்ஹாசன், இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா, தற்போது கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோ ஒன்றை அமைத்துள்ளார். இந்த ஸ்டுடியோவுக்கு நேற்று கமல் சென்றார். அவருக்கு ஸ்டுடியோவை இளையராஜா சுற்றிக் காட்டினார். பின்னர் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார்கள். அந்த பேச்சு விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் அடுத்த படங்களில் இளையராஜா இசை அமைக்க கேட்டிருக்கலாம் என்றும், தனது கட்சிக்கு பிரசார பாடல்களை அமைத்து தர அவர் இளையராஜாவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று அவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>