ஆபாச சி.டி வழக்கில் நடிகை ஷில்பாஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா உட்பட 2 பேருக்கு ஜாமீன்

மும்பை: ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட சி.டி தயாரித்து அதனை ஹாட்ஷாட் மொபைல் ஆப்ஸ் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கடந்த ஜூலை 19ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், ஷில்பா ஷெட்டி வீட்டிலும், குந்த்ராவின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது குந்த்ராவின் அலுவலகத்தில் உள்ள ரகசிய கப்போர்டில் கிரிப்டோ கரன்சி ஆவணங்கள் உள்ளதை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக குந்த்ராவின் அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் முன்னாள் ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், ராஜ் குந்த்ராவின் வியான் இண்டஸ்டிரீசில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேர் அப்ரூவர் ஆகினர். மேலும் ஆபாச படம் மூலம் குந்த்ராவின் கணவர் ஷில்பா ஷெட்டி வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

அவரது 2 கணக்குகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வங்கி தரப்பில் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் குந்த்ராவின் மீது 2வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், குந்த்ரா ஆபாச படங்கள் மூலம் பல லட்சம் சம்பாதித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் சுமார் 2 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ் குந்த்ரா, மற்றும் அவரது கூட்டாளி ரையான் தோர்பே ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதை மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், குந்த்ராவுக்கும், ரையான் தோர்பேவுக்கும் ஜாமீன் வழங்கி மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

Related Stories: