இங்கிலாந்தின் கொரோனா பயண விதிகள் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி:  இங்கிலாந்தின் கொரோனா தொடர்பான பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் ஒரு வகையான இனவெறி தாக்குதல் என காங்கிரஸ் கட்சி தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சசிதரூர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்நாட்டில் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கின்றனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், கோவிஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்தப்படுவது,  இனவெறியை தூண்டும் நடவடிக்கையாகும்’ என குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களுக்கான கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.

Related Stories:

>