×

நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Tags : Natham Viswanathan ,Election Commission ,ICC , Case against Natham Viswanathan's victory: Election Commission responds to ICC order
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!