என்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ.5 லட்சம்: கே.சி.வீரமணி தகவல்

ஜோலார்பேட்டை: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை தொடர்பாக திருப்பத்தூரில் நேற்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டி: எனது குடும்பத்தினர் பரம்பரையாக பணக்காரர்கள். இது எல்லோருக்கும் தெரியும். பினாமியின் பெயர்களில் நான் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிள்ளைகளுக்கு வீடு கட்ட மணல் சேமித்து வைத்துள்ளேன். எனக்கு ரூ.40 கோடி வங்கிக் கடன் உள்ளது. நான் தங்க நகைகள் அணிய மாட்டேன். ஏனென்றால் நான் ஆடம்பரத்தை விரும்பவில்லை. ஆனால் சொகுசு கார்களில்தான் செல்வேன். எனக்கு சிறு வயதில் இருந்தே சொகுசு கார்கள் பிடிக்கும். நான் 7ம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார். என்னிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் தான் என்றார்.

Related Stories:

More