சோழவரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

புழல்: சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக ரவிச்சந்திரன் மற்றும் பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு கவுன்சிலராக மகேந்திரன் ஆகியோர் இருந்தனர். இருவரும் உடல் நலம் சரியில்லாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தனர். இந்நிலையில், ஊராட்சி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, வேட்பு மனுத்தாக்கல் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 15வது வார்டு திமுக வேட்பாளர் ருக்மணி ரவிச்சந்திரன், 18வது வார்டு திமுக வேட்பாளர் மாலதி மகேந்திரன் ஆகியோர் நேற்று மதியம் எஸ்.சுதர்சனம்  எம்எல்ஏ தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கென்னடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், ஒன்றிய ஆணையாளர் ரவி மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>