×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டனர். அப்போது, ஒன்றிய பாஜ அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது, பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவது, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் உள்பட மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்வர் 20 முதல் 30ம் தேதிவரை பல்வேறு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அவரவர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் சாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி, ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக திமுகவினர் கோஷமிட்டனர். இதில், ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த சிறுவேடலில் எம்பி செல்வம், தனது  வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், நரசிங்கராயர் தெருவில் உள்ள நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் தங்களது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒன்றிய பாஜ அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது, பொருளாதார சீரழிவை ஏற்படுத்துவது, தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் உள்பட மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, மறைமலைநகரில் வரலட்சுமி மதுசூதனன் எல்எல்ஏ, தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அன்புசெல்வன் தலைமையில் செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், திமுகவினர் தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மறைமலைநகர் நகர செயலாளர் சண்முகம் தலைமையில் 21 வார்டுகளிலும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஆராமுதன் தலைமையில் 39 ஊராட்சிகளிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்போரூர்: திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் தலைமையில் செங்காடு கிராமத்தில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் அன்புச்செழியன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கருணாகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பையனூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையிலும், திருப்போரூர் நகர திமுக சார்பில் காலவாக்கத்தில் உள்ள வீட்டின் முன்பு நகர செயலாளர் தேவராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளிலும் ஊராட்சி கிளை செயலாளர்கள் தலைமையிலும், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வார்டு செயலாளர்கள் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமையில், திமுக நிர்வாகிகளின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அவைத்தலைவர் தியாகராஜன், பேரூர் துணை செயலாளர்கள் கீதா லட்சுமி, அகிலன், பழனி, செம்பியன், பேரூர் பொருளாளர் வாசன், திமுக நிர்வாகிகள் பரமானந்தம், அரிகிருஷ்ணன், அகிலன், சச்சிதாஸ், ஆச்சிபாபு, சுரேஷ்குமார், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வாலாஜாபாத் ஒன்றிய திமுக சார்பில் அனைத்து நிர்வாகிகள் இல்லங்களின் முன்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையிலும், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பூபாலன் தலைமையிலும் ஒன்றிய நிர்வாகிகள் இல்லங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Kanchipuram ,Chengalpattu ,Union Government , DMK black flag protest in Kanchipuram and Chengalpattu districts condemning the Union Government
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...