போக்குவரத்து கழகத்தில் 3 நிர்வாக இயக்குநர்கள் மாற்றம்

சென்னை: போக்குவரத்து துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழக(சென்னை) நிர்வாக இயக்குநர் ஜோசப் டயஸ், அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு போக்குவரத்துக்கழக(விழுப்புரம்) நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பொன்முடி, போக்குவரத்துக்கழக தலைவர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த இளங்கோவன், தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழக(சென்னை) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>