மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

தண்டையார்பேட்டை:  சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர குமார் (28), புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பில் சக காவலர்களுடன் தங்கி, உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று நண்பர்கள் வேலைக்கு சென்றதால், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பணி முடிந்து சக நண்பர்கள் வீட்டிற்கு வந்தபோது மகேந்திர குமார் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More
>