அரசுப்பள்ளி மாணவர்களின் இதயத்தில் முதல்வர் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்: சேர்க்கை ஆணை பெற்ற மாணவி நெகிழ்ச்சி

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை ஆணை பெற்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஹேமவர்சினி பேசியதாவது:  அண்ணாந்து பார்க்கும் அண்ணாப்பல்கலைக்கழகத்தில் படிப்பது என்பது வெறும் கானல் நீராய் இருந்த எங்கள் வாழ்வில் கையில் கொடுத்து நிஜமாக்கிய தமிழக அரசிற்கு நன்றி. அரசுப்பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என வெறும் சொற்களில் மட்டும் இல்லாமல் சாதித்து காட்டிய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் எங்கள் கல்விசெலவை ஏற்று எங்கள் வாழ்வை பிரகாசிக்க செய்த தமிழக அரசுக்கு நன்றி. முதல்வர் கோட்டையில் மட்டும் சிம்மாசனம் இட்டு அமரவில்லை. அரசுப்பள்ளி மாணவர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார். உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது.  இவ்வாறு கூறினார்.

Related Stories:

>