×

ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே; கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா?.. பி.டி.ஆர் ஆவேசம்

சென்னை: பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பல்வேறு வரி முறைகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. வரி விதிப்பில் மாற்றம் செய்வது மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்க அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் 12ம் தேதி கூட்டம் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 20 மாதங்களாக இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக மட்டுமே நடந்து வந்தது. 2019ம் ஆண்டு டிசம்பர் 18க்குப் பிறகு, முதல் முறையாக 17- தேதி 45வது ஜிஎஸ்டி கவுன்சில் நேரடி கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில்,  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. நேரடி கூட்டம் என்பதாலும், குறுகிய காலத்துக்குள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும், சில மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்துகொள்ளவில்லை.

ஆனாலும் அவரது உரை அந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்தில், எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, அதோடு எதை பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இதனிடையே, தனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் தான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி.கூட்டத்திற்கு செல்லவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக கூறி சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். இது குறித்து பதிலளித்த நிதியமைச்சர்; டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்; ஒன்றுக்கொன்று முறன்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே. நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா?

அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே இவ்வாறு ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.


Tags : Delhi ,Lucknow , Fools who tell 2 lies that contradict each other; Is the meeting in Delhi? Lucknow? .. PDR obsession
× RELATED லக்னோ சவாலை சமாளிக்குமா டெல்லி