×

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!

சென்னை: காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக தற்போது இருக்கக்கூடிய சூழலில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

* திறந்த வெளியில் கூட்டம் நடத்தப்படுவதையும், கொரோனா விதிகளை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

* கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* கிராம சபை தொடங்குவதற்கு முன், அகச்சிவப்பு வெப்பமானியைப் பயன்படுத்தி பங்கேற்பாளர்களை வெப்பநிலையின் அடிப்படையில் முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.

* ஒருவருக்கு அதிக வெப்பநிலை இருந்தால், அவரை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.

* சந்திப்பு இடத்தில் சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தனிநபர்களுக்கிடையேயான குறைந்தபட்ச தூரம் 6 அடி இடைவெளியை அந்த சந்திப்பு இடத்தில் பராமரிக்க வேண்டும்.

* கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் (இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை) கிராம சபையில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது.

* கூட்டம் 02.10.2021 காலை 10 மணிக்கு கூட்டப்பட வேண்டும்.
    
* கிராம சபையின் நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டுப்படுத்தலாம் மற்றும் கால அவகாசத்திற்குள் நிகழ்ச்சி நிரல்களை எடுத்து விவாதிக்க வேண்டும்.

* கிராம பஞ்சாயத்து அல்லது கிராம பஞ்சாயத்தின் குறிப்பிட்ட பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டால், கிராம சபை பிற்காலத்தில் நடத்தப்படலாம்.

* பஞ்சாயத்து இன்ஸ்பெக்டரின் எழுத்துப்பூர்வ அனுமதியின் பின்னரே இந்த விதிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

* மேலும், மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிலையான இயக்க நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Grama Council Meeting , Government of Tamil Nadu permission to hold Grama Niladhari meeting on October 2 with various restrictions: Instruction to follow the guidelines ..!
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...