×

கடலூரில் அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 17 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர்: கடலூர் மாவட்டம் திருச்சோழபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்கன்வாடி மையங்களில் காலை 11 மணி முதல் 12 வரை குழந்தைகளுக்கு உணவு சமைத்து சத்தான உணவு கொடுக்க வேண்டும் தமிழக அரசு என்று அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்டம் திருச்சோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட பூதங்கட்டிகம்பளிமேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மதிய உணவு வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களில் ஒவ்வொருவருக்காக வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் 17 குழந்தைகள் அழைத்துவரப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த உணவை சோதித்த போது உணவில் பல்லி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூர் ஆட்சியர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அலட்சியமாக யாரேனும் செயல்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் உடனடியாக ஆய்வுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாகவும், ஆய்வு அறிக்கையை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : Ankangwat ,Katalur , Anganwadi, Children, Hospital
× RELATED பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை...