புதுகை மாவட்டத்தில் 2ம் கட்டமாக 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்-மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஞாற்றுகிழமை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது தடவையாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் கறம்பக்குடி வட்டாரத்தில் 36 இடங்களிலும், கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் 30 இடங்களிலும், திருமயம் வட்டாரத்தில் 32 இடங்களிலும், அரிமளம் வட்டாரத்தில் 35 இடங்களிலும், விராலிமலை தாலுகாவில் 36 இடங்களிலும் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியில் 20 இடங்களிலும் ஆக மொத்தம் 189 இடங்களில் கோவிட்-19 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்து 742 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் தினசரி அரசு மருத்துவமனைகள், கிராம பஞ்சாயத்துகள், ஆரம்ப சுகாதர நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>