×

இரவில் மதுபான பார்...புகையிலை விற்பனை ஜோர் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிலும் கை வச்சுட்டாங்க-போலீசாரின் நடவடிக்கை அவசியம்

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் கிடக்கிறது. புதிய ஆட்சி பதவியேற்றதும், புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த கலெக்டர், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு நடத்திய நிலையில், மேல்நடவடிக்கை எடுக்காததால் வழக்கம் போல் செயல்படாத பஸ் நிலையமாக காட்சி தருகிறது.
விருதுநகர் புதிய பஸ் நிலையத்திற்கு மேற்கூரையை குடிமகன்கள் இரவு நேரங்களில் திறந்தவெளி பாராக மாற்றி விட்டனர். இரவு 9 மணி முதல் குடிமகன்கள் பாட்டில்களுடன் கும்மாளமிட்டு குடித்து செல்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதுபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை விற்பனை கனஜோராக நடைபெறுகிறது. ரூ.8 மதிப்பிலான புகையிலையை பழைய பஸ் நிலையம், அல்லம்பட்டி, நகராட்சி சுற்றுப்பகுதி, முத்துராமன்பட்டி, பாண்டியன்நகர் என அனைத்து பகுதிகளிலும் கடைகளில் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை நடக்கிறது.

 மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் வழிகளில் உள்ள கடைகளில், கல்வி நிலையங்களை ஒட்டிய கடைகளிலும் மறைத்து வைத்து விற்பதாக கூறுகின்றனர். எனவே, மாவட்ட காவல் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Sales Jour Weruthunagar , Virudhunagar: The old bus stand at Virudhunagar has been inactive for more than 30 years. When the new regime takes office, the new bus
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே...