ஆம்பூர் அருகே குளிக்க சென்றபோது பாலாற்றில் தேங்கிய நீரில் மூழ்கிய வாலிபர்-தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே பாலாற்றில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற வாலிபர் மூழ்கினார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் சாமியார் மடம் பாலாற்றில் நேற்று மதியம் சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆம்பூர் பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மோகன் மகன், செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ராகேஷ்(24) என்பவர் நண்பர்களுடன் குளித்துள்ளார்.

அப்போது திடீரென ராகேஷ் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்ட உடன் வந்த சிலர் கூச்சலிட்டு காப்பாற்ற முயன்றனர். ஆனால், நீரில் மூழ்கிய ராகேஷை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் அளித்த தகவலின் பேரில் பேரணாம்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். சுமார் 3 மணி நேரம் தேடிய நிலையில் இருள் சூழ்ந்தால் தேடும்பணி கைவிடப்பட்டது. இதனால், இன்று மீண்டும் தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: