ஆம்பூர் அருகே மழையால் 25 ஏக்கரில் பயிர்கள் சேதம்-விவசாயிகள் வேதனை

ஆம்பூர் : ஆம்பூர் அருகே நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக 25 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, வெற்றிலை பயிர்கள்  சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள கானாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஆம்பூரில் பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் வெள்ளம் வழிந்தோடியது.

இந்நிலையில், ஆம்பூர் தாலுகாவிற்குட்பட்ட பச்சகுப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி மற்றும் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் கனமழையால் சேதமானது. சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: