×

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் தருமா? வரும் 6ம் தேதி முக்கிய ஆலோசனை

ஜெனிவா: கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் 6ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் பாதுகாப்பு அம்சங்கள் 3 கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியுள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அங்கீகாரம் வழங்கும். அக்குழுவின் கூட்டம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தடுப்பூசியின் சிறப்பு அம்சங்களை பாரத் பயோடெக் நிறுவனம் விளக்குகிறது. அதை நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்யும். நிபுணர் குழு உறுப்பினர் ஹன்னா லோகினட் கோவாக்சின் தொடர்பான வரைவு சிபாரிசுகளை தாக்கல் செய்தார். அதன்மீது விவாதம் நடத்தப்படும். இறுதியாக நிபுணர் குழு தனது சிபாரிசுகளை அளிக்கும். அதன் அடிப்படையில் கோவாக்சினை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.

Tags : World Health Organization , Covaxin
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...