×

தமிழக அரசுக்கு பொறியாளர் சங்கம் கோரிக்கை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் பணிமாறுதல்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொறியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் மதனமுசாபர், பொதுச்செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் பொறியாளர்களின் பணியிட மாறுதல் பெது கலந்தாய்வு (கவுன்சலிங்) முறையில் வழங்க வேண்டும்.
* நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி முதன்மை இயக்குனர் பணியிடத்தை ஐஏஎஸ் அதிகாரி நிலையிலும், இணை இயக்குனர் (நிர்வாகம்) பணியிடத்தினை மாவட்ட உதவி ஆட்சியர் நிலையில் தரம் உயர்த்தி அலுவலர்களை தரம் உயர்த்தி அலுவலர்களை அரசு நியமிக்க வேண்டும்.
* இளநிலை பொறியாளர் காலி பணியிடம் 2020-2021 மற்றும் 2021-2022ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Engineers' Association ,Government of Tamil Nadu ,Highways Department , Government of Tamil Nadu, Engineers Association, Highways Employees, Public Survey
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி