குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பெண்களுடன் உல்லாசம்: நாகையில் வாலிபர் கைது

கீழ்வேளூர்: நாகை மாவட்டம்  கீழ்வேளூர் அடுத்த முப்பத்திகோட்டகம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்  பாரதிராஜா(25). இவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள குளங்களில் பெண்கள் குளிப்பதை அவர்களுக்கே தெரியாமல்  செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களை  காண்பித்து பெண்களை மிரட்டி அவர்களுடன் உல்லாசம்  அனுபவித்து வந்துள்ளார்.இந்நிலையில், ஒரு பெண்ணுடன் பாரதிராஜா உல்லாசமாக இருந்த  புகைப்படம் ஒன்றை அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இதை  பார்த்த அந்த பெண்ணின் பெரியப்பா மகன், நேற்றுமுன்தினம் பாரதிராஜாவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்கு பதிந்து பாரதிராஜாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>