கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்திய 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

அந்தியூர்: கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி வேனில் கடத்திய 800 கிலோ புகையிலை பொருட்களை பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநிலம் கொள்ளேகாலிலிருந்து கோவை வந்த ஒரு காய்கறி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், காய்கறிகளுக்கு நடுவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.6 லட்சத்து 63 ஆயிரத்து 600 மதிப்பிலான 798 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத்தொடர்ந்து, வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மோகித் (26), செல்வராஜ் (25) ஆகிய 2 பேரை கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>