மதுரை அருகே பரபரப்பு மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் தற்கொலை

பேரையூர்: மதுரை அருகே மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே சின்னக்கட்டளையில் மின்வாரிய துணை மின்நிலையம் உள்ளது. இங்கு உதவி மின்பொறியாளராக சின்னச்சாமி (51) பணியாற்றி வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவி, 22, 18 வயதில் இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் அதிகம் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் அலுவலகம் வந்து சின்னச்சாமி ஈடுபட்டார்.

இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளில் தற்காலிக பணி செய்து வந்த மின் ஊழியர்கள், நேற்று அதிகாலை அலுவலகம் வந்தனர். அப்போது, பூட்டி கிடந்த அலுவலகத்திற்குள் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு சின்னச்சாமி பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சேடபட்டி போலீசார் வந்து கதவை உடைத்து, சின்னச்சாமி உடலை மீட்டடு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னச்சாமி, பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்பப் பிரச்னை காரணமா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>