அரசியல் பிரமுகர் ரிசார்ட்டில் போதை விருந்து சொர்க்கம் மதுவிலே... சொக்கும் அழகிலே...மாணவிகள் அரை நிர்வாண நடனம் இன்ஜினியர்கள் உட்பட 30 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியிலுள்ள தனியார் ரிசார்ட்டில் போதை பொருள் எடுத்துக்கொண்ட மாணவிகள் மற்றும் சிலர் விருந்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. ரிசார்ட்டில் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த போதை மாணவிகள் ஆனேக்கல் வனப்பகுதி வழியாக தப்பி ஓடினர். ஆனால், அவர்களை விடாது துரத்தி பிடித்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.  போதை விருந்து நடந்த ரிசார்ட் மதசார்பற்ற ஜனதா தள அரசியல் கட்சி பிரமுகருக்கு சொந்தமானது.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஆகியோர் வார இறுதிநாள் என்பதால் கூட்டாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான கஞ்சா, கோகைன் போன்ற போதை பொருட்களை இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாபியா ஒருவர் சப்ளை செய்துள்ளார். போதை தலைக்கேறிய மாணவிகள், உடைகளை கழற்றி அரை நிர்வாணத்துடன் நடனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை மற்றவர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியர்கள், மாணவிகள் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 7 கார், 16 பைக், செல்போன், பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>