×

கரூர் பகுதியில் தரைக்கடைகளுக்கு சுங்க வரி ரத்து: சிறு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

கரூர்: கரூர் பகுதியில் தரை கடைகளுக்கும் வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கும் சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறுவிவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர் தமிழக அளவில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகும் இங்கு தினசரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ் பாடி கம்பெனி, செங்கல் சூளைகள் ஆகியவற்றிற்கு பணிக்கு வந்து செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கழுகு பஸ் நிலையம், ரைட் கார்னர், சர்ச் கார்னர், வெங்கமேடு காந்திகிராமம், தாந்தோனிமலை ,ராயனூர் , வாங்கப்பாளையம் ஆகிய பகுதி மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களில் விலையில் ஆப்பிள், மாதுளை, அவக்கோடா ,பன்னீர் திராட்சை, ஆரஞ்சு பல்லாரி வெங்காயம் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகிய விவசாய பொருள்கள் வாகனங்களில் வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் கடந்த கால ஆட்சியில் சுங்கம் வசூலிக்கும் உரிமையை டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் சுங்க வசூல் செய்யப்பட்டது. இதனால் சிறு மற்றும் பெரும் வணிகர்கள் விவசாயிகள் சுங்கம் வசூலிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எடுத்துக்கூறியதையடுத்து சுங்கம் வசூலிப்பது கைவிடப்பட்டது.

இதனால் மக்கள் கூடும் அனைத்து பகுதியிலும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், காய்கறிகள், ஆடைகள் உள்பட பல்வேறு பொருட்கள் கூவி கூவி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சுங்கம் இல்லாத காரணத்தைக் மையமாகக் கொண்டு கரூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சிறு வணிகர்கள் வாகனத்தில் வந்து கரூரில் பொருட்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வந்தோரை வாழவைக்கும் கரூர் மாநகரில் தற்போது அதிகமான வெளி மாவட்ட வாகனங்களும் வந்து குவிந்துள்ளன. இருப்பினும் கரூர் மாவட்ட நிர்வாகம் கரூரில் உள்ள விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்காதவாறு விதிமுறை படுத்த வேண்டும் என
விவசாயிகள், சிறு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur , Customs duty on floor shops in Karur canceled: Small farmers, traders happy
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்