கரூர்-மதுரை பைபாஸ் திருச்சி பிரிவு அணுகு சாலையை சீரமைக்க வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

கரூர்: கரூர்- மதுரை பைபாஸ் ரோடு திருச்சி பிரிவு அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்திய அளவில் பிரசித்தி பெற்ற தேசிய நெடுஞ்சாலைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் சாலைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.இதன்படி கரூர் மாவட்ட எல்லையான ஆண்டிபட்டிகோட்டை முதல் தவுட்டுப்பாளையம் வரை சுமார் 45 கிமீ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை ஆனது தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தோடு நிறைவு பெறுகிறது. சுமார் 15 மாவட்டங் கள் இந்த சாலையில் கடந்து சென்றாலும் கரூர் மாவட்டத்தில் மட்டுமே 45 கிமீ அளவிற்கு மாவட்ட எல்லைகளை கடந்து செல்கிறது.

கரூர் மாவட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அணுகு சாலை அமைந்துள்ளது அணுகுசாலை அமைந்துள்ள அத்தனை இடங்களிலும் சாலைகளை சரியான பாதுகாப்பு, பராமரிப்பு செய்யாமல் அத்தனை அணுகு சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எல்லா அணுகுசாலை களும் பக்கத்தில் உள்ள பெரிய மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலையாக இருப்பதால் அது தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. பயணிகள் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மோசமான குண்டும், குழியுமான அணுகு சாலைகள் அனைத்தையும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஒரு சான்றாக கரூர் மதுரை பைபாஸ் சுக்காலியூர் சாலை அமைந்துள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>