×

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு.!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.44 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.34 கோடியை தாண்டியது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதாகவும், அது மட்டுமல்லாமல் இந்த கொரோனா தொற்று காரணமாக வறுமையில் உள்ள ஏழைகளின் துயரத்தைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : President ,Ramnath Govind , Corona epidemic has hit the country's economy hard for 18 months: President Ramnath Govind's speech.!
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்