அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் மணல் பதுக்கல் தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் மணல் பதுக்கல் தொடர்பாக திருப்பத்தூர் ஆட்சியரிடம் கனிமவளத்துறை அறிக்கை அளித்துள்ளது. கடந்த வியாழன் அன்று நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது கே.சி.வீரமணி வீட்டில் பெரும் மணல் குவியல் கண்டறியப்பட்டது. 275 யூனிட் மணல் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய நிலையில் கனிமவளம், பொதுப்பணித்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் கே.சி.வீரமணி வீட்டில் இருந்தது 551 யூனிட் மணல் என்பது தெரிய வந்துள்ளதாக ஆட்சியருக்கு கனிமவளத்துறை அறிக்கை அளித்துள்ளது.

Related Stories:

More