×

உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம், அமமுகவுக்கு குக்கர்: சின்னம் ஒதுக்கீடு

சென்னை:  தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கியது. வேட்புமனு ஆய்வு வரும் 23ம் தேதி நடக்கிறது. இதேபோல், செப்டம்பர் 25ம் தேதி வேட்புமனுவை திருப்பப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

Tags : Inland ,Bombaram , Local elections, Madhimuga, Bambaram, Ammuga, Cooker,
× RELATED கேலோ இந்திய விளையாட்டு நாளை நடைபெற...