×

ஏரல் அருகே கொற்கை அகழாய்வில் இரண்டு அடுக்கு கொள்கலன் கண்டெடுப்பு

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம்  சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வும் பிப்.26ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் 3 ஆயிரம் ஆண்டுகள் மிகப்பழமையான 29 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானமும், மற்றொரு குழியில் 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்களும், இதனருகே அழகிய முழு சங்குகள், சங்கு அறுக்கப்பட்ட நிலையிலும் ஏராளமாக கிடைத்துள்ளன. இந்நிலையில் செங்கல் கட்டுமான அடுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 2 வாரங்களுக்கு முன் 4 அடி உயரமுள்ள கொள்கலன் கிடைத்துள்ளது.

அதனை எடுத்த போது அதற்கு அடியில் மற்றொரு கொள்கலன் இருந்துள்ளது. இந்த கொள்கலனில் இருந்து பளபளப்பான கருப்புநிற பானை ஓடு துண்டு கிடைத்துள்ளது. கங்கை சமவெளியில் மட்டும் கிடைத்து வந்த பளபளப்பான பானை ஓடு துண்டு, இங்கு கிடைத்துள்ளதால் கொற்கைக்கும், கங்கை சமவெளி பகுதிக்கும் பழங்காலத்தில் வாணிக தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொள்கலன் அருகில் வெளியே மேற்கு ஆசிய நாடான எகிப்தில் எண்ணெய் ஜாடியாக பயன்படுத்திய பானை ஓடுகளின் துண்டுகள் 4 கிடைத்துள்ளது.

Tags : Korkai ,Eral , Earl, crutch, excavation, two-layer container
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...