×

அயோத்தி ராமருக்கு ஜல அபிஷேகம் 115 நாடுகளில் இருந்து புனித நீர் வந்து சேர்ந்தது: ராஜ்நாத்திடம் கலசங்கள் ஒப்படைப்பு

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு 115 நாடுகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பல ஆயிரம் கோடி செலவில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடித்தளம்  அமைக்கும் பணி சில தினங்களுக்கு முன் முடிந்தது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இக்கோயிலை கட்டி முடித்து திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் ராமர் சிலைக்கு ஜல அபிஷேகம் செய்வதற்காக, உலக நாடுகளில் இருந்து ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், கடல் போன்றவற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது.

இதற்காக முயற்சியில், பாஜ.வை சேர்ந்த முன்னாள் டெல்லி எம்எல்ஏ விஜய் ஜாலி தலைமையிலான தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 115 நாடுகளில் இருந்த பெறப்பட்ட புனித  நீர், 115 கலசங்களில் கொண்டு வரப்பட்டு, டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்களும், ராமர் கோயில் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பாத் ராஜும் கலந்து கொண்டனர். இந்த முயற்சியை பாராட்டிய ராஜ்நாத் சிங், ‘மேலும், 77 நாடுகளில் இருந்து விரைவில் புனித நீர் கொண்டு வரப்படும்.’ என்று தெரிவித்தார். 


Tags : Ayodhya Rama , Ayodhya, Water Anointing, St. Nee, Rajnath
× RELATED மாமல்லபுரத்தில் தேக்கு மரத்தில்...