1600 இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 12ம்  தேதி  1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு  1,91,350 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து, சென்னை யில் 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது. இதில் கோவிஷீல்டு முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய  நபர்களும், கோவாக்சின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் பயனடையலாம்.  

சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை  பொதுமக்கள்  https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp  என்ற  மாநகராட்சியின் இணையதளம் வாயிலாகவும், 044-2538 4520,  044-4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து  கொள்ளலாம்.

Related Stories:

>