நாடு முழுவதும் 75 ரயில்வே பயிற்சி கூடங்கள்: ஒன்றிய அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை:  நாடு  முழுவதும் உள்ள 75 ரயில்வே பயிற்சி கல்விக்கூடங்கள் வாயிலாக தொழில்துறை  சார்ந்த உரிய திறமைகளையும், நுட்பங்களையும் கற்றுக்கொள்ளும் வகையில்  ரயில்வே துறை தொடக்க நிலை பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சி மையத்தை  ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் பவனில் தொடங்கி  வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,  ‘‘இந்த திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி  வழங்கப்படும். எலக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிட்டர் ஆகிய தொழில் சார்ந்த  திறன் பெறும் பயிற்சி வழங்கப்படும். தொடக்க அடிப்படை பயிற்சி 100 மணி  நேரமுடையதாக இருக்கும்’’ என்றார்.

Related Stories:

>