ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய சட்டபேரவைக்கு தலைமை செயலக அலுவலகத்தை மாற்றம் செய்ய வேண்டும்: அரசு ஊழியர்கள் முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, செயலாளர் ஆறுமுகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு 2022ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 13 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வரை சந்தித்து நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டோம்.

இந்த சந்திப்பின்போது, அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், பணிக்கொடை என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.மேலும், தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறையால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகத்திற்கு அலுவலகத்தை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories:

>