×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 28 மாவட்ட தற்செயல் தேர்தலுக்கான பார்வையாளர்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம்- வே.அமுதவல்லி, செங்கல்பட்டு- வா.சம்பத், விழுப்புரம்- கே.எஸ்.பழனிசாமி, கள்ளக்குறிச்சி- கே.விவேகானந்தன், வேலூர்- சா.விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை - சோ.மதுமதி, திருப்பத்தூர்- சி.காமராஜ், திருநெல்வேலி- ஜெ.ஜெயகாந்தன், தென்காசி- பொ.சங்கர். இதேபோல், 28 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, கோவை, நீலகிரி- மா.மதிவாணன், திருவள்ளூர், திருவண்ணாமலை- ஞானசேகரன், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி- ஹரிஹரன், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்- அனில் மேஷ்ராம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்- சி.நா.மகேஸ்வரன், நாகப்பட்டினம், திருவாரூர்- ரா.செல்வராஜ், மதுரை, தேனி, திண்டுக்கல்- கா.பாஸ்கரன், சிவகங்கை, விருதுநகர்- மு.கருணாகரன், ஈரோடு, திருப்பூர், நாமக்கல்- சிவசண்முகராஜா, திருச்சி, கரூர், புதுக்கோட்டை- சு.கணேஷ், கடலூர் மற்றும் மயிலாடுதுறை- ரா.நந்தகோபால்.

மேற்குறிப்பிட்ட தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 22.9.2021ல் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள். அவர்களின் அலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Rural Local Elections, Election Observers, IAS
× RELATED தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100...