பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல்வர் முகத்திற்கு நவ்ஜோத் சிங் சித்து பெயரை முன்மொழிந்தாள் எதிர்ப்பேன்:அமரீந்தர் சிங் அதிரடி..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல்வர் முகத்திற்கு நவ்ஜோத் சிங் சித்து பெயரை முன்மொழிந்தாள் எதிர்ப்பேன் என்று அமரீந்தர் சிங் பேட்டியளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் பல ஆண்டுகளாகவே பனிப்போர் நீடித்து வந்தது.

இதனையடுத்து, பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். தற்போது வரை நான் காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின் எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவெடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய இன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில்,  பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் உள்ளது என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் பதவி விலகிய நிலையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நவ்ஜோத் சிங் சித்து ஒரு திறமையற்ற மனிதர், அவர் ஒரு பேரழிவாக இருக்கப் போகிறார். அடுத்த முதல்வருக்கான போட்டியில் அவரது பெயரை பரிந்துரை செய்தால் நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>