×

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!: வருமான வரித்துறை தகவல்..!!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட், அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசின் திட்டம் ஒன்றுக்கு விளம்பர தூதரக சோனு சூட் நியமிக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். இந்நிலையில் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு கொரோனா அலையின் போது நிறுவப்பட்ட சோனு சூட்டின் தொண்டு நிறுவனம் 18 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றிருப்பதும், இதில் 17 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சோனு சூட் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அரசுடன் இணைந்துள்ள சோனு சூட்டை மிரட்டவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


Tags : Actor Sonu ,Suite: Income , Actor Sonu Suite, Trial, Tax Evasion
× RELATED ஊரடங்கு கால ஹீரோவுக்கு அங்கீகாரம் :...