×

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க கூட்டணிக்குள் போட்டி!: பாஜக கோரிக்கையை நிராகரித்தது என்.ஆர்.காங்கிரஸ்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. பதவியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. புதுச்சேரி மாநில மாநிலங்களவை எம்.பி. பதவியை பிடிக்க ஒரே கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜக போட்டியிடும் என்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜெயபால் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்து ஓரிரு நாட்களில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் ஜெயபால் குறிப்பிட்டுள்ளார். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏக்களும், இதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். திமுகவுக்கு 6 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் 6 பேர் இருக்கின்றனர்.

Tags : Puducherry ,Assembly ,NR Congress ,BJP , Puducherry State Legislature, MP Position, BJP, NR Congress
× RELATED புதுச்சேரியில் சட்டமன்றம் நோக்கி பேரணி!!