செங்கல்பட்டு அருகே நடைப்பயிற்சி சென்ற புதுமாப்பிள்ளை மீது ஏறிய கார்!: பதை பதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சாலையோரம் நடைப்பயிற்சி சென்ற புதுமாப்பிள்ளை மீது அதிவேகத்தில் வந்த கார் ஏறிய பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட செல்வத்துக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த செல்வம் மீது அந்த வழியே அதிவேகத்தில் வந்த கார் மோதியது.

இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்டு  படுகாயமடைந்த செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவிக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்து கொண்டிருந்த கணவரே செல்வத்தின் மீது காரை ஏற்றியது விசாரணையில் தெரியவந்தது. விபத்து தொடர்பாக செல்வத்தின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More