கொடைக்கானலில் கூடுதல் பார்க்கிங் வசதி வேண்டும்

*சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல் : மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டு  முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக  கோடை சீசன் (ஏப்ரல், மே மாதங்கள்), வார மற்றும் தொடர் விடுமுறை நாட்களில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும். இச்சமயங்களில் கொடைக்கானல் நகரில்  சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல்  உள்ளது.

இதுதவிர வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்  பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் போதிய பார்க்கிங்  வசதி இல்லாமல் உள்ளது. இதனால் கடும் வாகனம் நெரிசல் ஏற்படுவதால் சுற்றுலா  பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட, நகராட்சி நிர்வாகம் வரும் கோடை  சீசன் காலத்திற்குள் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா தல பகுதிகளில்  கூடுதல் வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>