×

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

மாமல்லபுரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக மாமல்லபுரத்தில் இன்று காலை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு, கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், மாமல்லபுரம் குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்ததால், அவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். கடல் சீற்றம் காரணமாக, சுமார் 10 அடி உயரத்துக்கு அலை எழும்பியது, கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. …

The post மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Yas ,Bay of Bengal ,
× RELATED வங்கக்கடலில் உருவான ‘ரெமல்’ புயலால் மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்