×

2 டன் இரும்பு கழிவுகள் மூலம் 14 அடி உயர மோடி சிலை!: பெங்களூருவில் நிறுவ முடியாமல் பாஜக நிர்வாகிகள் தவிப்பு..!!

ஹைதராபாத்: 2 டன் இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட 14 அடி உயர மோடி சிலையை நிறுவ அனுமதி கிடைக்காமல் பெங்களூரு பாஜக நிர்வாகிகள் தவிர்த்து வருகின்றனர். பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதி கவுன்சிலர் மோகன் குமார், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தனித்துவமாக கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதற்காக இரும்பு கழிவுகளால் அவரது உருவ சிலையை உருவாக்கி அதனை பெங்களூருவில் நிறுவ முடிவு செய்தார். சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து 2 டன் இரும்பு கழிவுகளை வாங்கி அதனை ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரராவ் மற்றும் ரவி ஆகியோரிடம் சிலை செய்ய சொல்லியிருந்தார்.

கழிவுகளை கொண்டு  தலைவர்களின் சிலைகளை வடிவமைப்பதில் வல்லவர்களான  வெங்கடேஸ்வரராவ் மற்றும் ரவி, 2 மாதங்களாக போராடி 14 அடி உயர மோடி சிலையை வடிவமைத்தனர். ஆனால் பெங்களூருவில் புதிய சிலைகளை நிறுவ கர்நாடக உயர்நீதிமன்றம் தடா விதித்திருப்பது தெரியாமல், பாஜக நிர்வாகிகள் சிலை செய்ய ஒப்பந்தம் செய்துவிட்டனர். தற்போது சிலையை வைக்க அனுமதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தற்போது மோடி சிலை ஆந்திராவிலேயே உள்ளது. விரைவில் அனுமதி பெற்று ஜனவரியில் மோடியின் சிலையை பெங்களூருவில் வைத்துவிடுவோம் என பாஜக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய அனுமதி இல்லாமல் மோடி சிலையை நிறுவினால் போராட்டங்கள் வெடிக்கும் என்று சமுக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags : Modi ,BJP ,Bangalore , Iron waste, Modi statue, Bangalore, BJP executives
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...