அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் உறவு துண்டிப்பு.: பிரான்ஸ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

பாரிஸ்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா-வின் உறவுகளைத் துண்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது.

சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் இணைந்து, ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை சமீபத்தில் தொடங்கியது. இந்த நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துகளை எடுத்து, இதற்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது. இவை இணைந்து, இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிரான்சிடம் இருந்து டீசல் தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஆஸ்திரேலியா கடந்த 2016-ல் ஒப்பந்தம் செய்து இருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து புதிய அமைப்பை தொடங்கிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதற்கு, ‘ஆஸ்திரேலியா எங்களின் முதுகில் குத்திவிட்டது’ என்று பிரான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா-வின் உறவுகளைத் துண்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் பிரான்ஸ் ஆலோசனை நடத்திவருகிறது. தங்களது அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: