ஆட்டோ டிரைவர், உரிமையாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் துவக்கம்: க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காந்தி சாலை பெரியார் நினைவுத் தூண் அருகில் ஆட்டோ டிரைவர், உரிமையாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்க தொடக்க விழா நேற்று நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி சங்கத்தை தொடங்கி வைத்தார்.

தொமுச பேரவை செயலாளர் பொன்னுராம் வரவேற்றார். காஞ்சி மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் கே.ஏ.இளங்கோவன், பொருளாளர் அரசு, செயலாளர் பெ.சுந்தரவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ எழிலரசன் தொமுச கொடியேற்றி சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இதில் எம்பி செல்வம், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், சங்கத்தின் சிறப்பு தலைவர் சாட்சி சண்முகசுந்தரம், 29வது வட்ட செயலாளர் ஸ்ரீபால், சங்க தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் அமீத்பாஷா, பொருளாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>