செங்கை, காஞ்சி மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் பெரியார் சிலைக்கு காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையில் கதிரவன் உள்பட திகவினர் ஏராளமானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், நகர செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும், உறுதிமொழி ஏற்று கொண்டனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், நிர்வாகிகள் எம்.ஜி.அருள், வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர திமுக சார்பில், பெரியார் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், திமுகவினர் சமூக நீதிநாள் உறுதி மொழி ஏற்றனர். இதில், நகர திமுக நிர்வாகிகள் திருவள்ளுவன், மண்ணு, முனுசாமி, ராஜி, சந்தோஷ், அல்தாப், பிரதாபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நகர நிர்வாகிகள் ரவீந்திரன், அன்புச்செல்வன், காஞ்னா, மாலதி உள்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் கரசங்கால் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு குன்றத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூடுவாஞ்சேரி: பெரியார் பிறந்தநாளையொட்டி, கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகில் சர்க்கரை பொங்கல் வழங்கும் விழா நடந்தது. பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் கே.பி.ஜார்ஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, அப்துல்காதர், ரவி, சதீஷ்குமார், ஏ.எஸ்.தரணி, பிரகாஷ் டெலிவரி ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி சதீஷ்குமார் வரவேற்றார்.

எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சமூகநீதி நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்று கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கராத்தே பாண்டி, மதிமுக மாவட்ட துணை செயலாளர் பாரத் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் ஜான்சிராணி, தசரதன், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகி எம்.கே.எஸ்.செந்தில் நன்றி கூறினார்.

Related Stories:

More
>