சிறுமிகளிடம் பலாத்காரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை: திருவில்லி. போக்சோ கோர்ட் அதிரடி

திருவில்லிபுத்தூர்,: சிறுமிகளிடம் பலாத்காரம் தொந்தரவில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மீது கடந்த 2016, நவ.28ல் ஆறு வயதுடைய 2 சிறுமிகளை கடத்தி, சிறுமிகளிடம் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் 366 (பாலியல் தொல்லைக்காக கடத்திச் செல்லுதல்), 342 (சட்டவிரோதமாக தடுத்தல்), 506(2) (கொலை மிரட்டல் விடுத்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் இரு வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர்.

இவ்வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி தனசேகரன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட நடராஜன் 2 சிறுமிகளிடம் பலாத்காரம் தொந்தரவில் ஈடுபட்ட தற்காக, 366-வது பிரிவின்படி 20 ஆண்டுகள், 342-வது பிரிவின்படி 2 ஆண்டுகள், 506(2) பிரிவின்படி 4 ஆண்டுகள், போக்சோ 2 வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.14 லட்சம் இழப்பீடாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்க வேண்டுமெனவும் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>