×

நட்சத்திர ஓட்டல், வேளாண்மை கல்லூரி, பல்வேறு இடங்களில் சொகுசு பங்களா பீடி தொழிலாளி மகனான கே.சி.வீரமணி பல கோடிகளுக்கு அதிபதியான பின்னணி

* உள்நாடு, வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு
* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பீடி ெதாழிலாளி மகனான மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி பல கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளார். இதன் மூலம் உள்நாடு, வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி கிராமத்தைச் ேசர்ந்தவர்கள் சின்னராசு, தங்கவேலு இருவரும் சகோதரர்கள். இருவருமே பீடித்தொழில் செய்து வந்தனர். இதில் சின்னராசுவின் முதல் மனைவி மணியம்மாள். இவரது வாரிசுகள் கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ், ேக.சி.ராவணன், கே.சி.சம்பத், கே.சி.வீரமணி, கே.சி.சமாதானம், கே.சி.மலர்கொடி, ேக.சி.தன்மானம், ேக.சி.சமாதானம் ஆகிய 9 பேர். 2வது மனைவி கமலம்மாள் இவருக்கு விஜயன், கே.சி. எழிலரசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மனைவியின் 8வது மகனாக பிறந்தவர்தான் கே.சி.வீரமணி.

இதில் சின்னராசு, தங்கவேலு ஆகிய 2 ேபரும் சேலத்தில் இருந்து பீடித்தொழிலுக்கு தேவையான மூலப்ெபாருட்களை வாங்கி வந்து, பீடிசுற்றி அதனை மீண்டும் கொண்டு சென்று சேலத்தில் விற்று வந்துள்ளனர். இதற்கிடையில் விடுதலை புலிகள் ஜோலார்பேட்டையில் முகாம் அமைக்க வந்தபோது, வீரமணியின் தந்தை வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது விடுதலை புலிகள் இயக்கத்ைதச் சேர்ந்த ஒருவருக்கும் வீரமணியின் அக்கா தன்மானத்திற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் கனடா நாட்டிற்கு ெசன்றுவிட்டனர். இதையடுத்து கே.சி.வீரமணியின் தாயும் கனடா சென்றுவிட்டார். அதன்பின்னர் ஒரு ஆண்டுக்கு பின்னர் இந்தியா திரும்பிவிட்டார். கே.சி.வீரமணி ேஜாலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள ெதற்கு பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயின்றார். அதன்பின்னர் ஜோலார்பேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும்தான் சென்று வந்துள்ளார்.

இதையடுத்து திராவிடர் கழக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். குடும்ப சூழலால் பீடித்தொழிலையும் செய்து வந்தார். அதன்பின்னர் கே.சி.வீரமணியின் தந்ைத சின்னராசு, தனது சகோதரரான தங்கவேலுவை ஏமாற்றி, பீடிகம்பெனியை அபகரித்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் பீடிகம்பெனியை கே.சி.வீரமணி உட்பட அண்ணன், தம்பிகள் நடத்தி வந்தனர். பீடிக்கட்டுகளை ேசலத்திற்கு கொண்டு செல்லும்போது விபத்தில் சிக்கி ராவணன், சம்பத் பலியாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பீடிக்கம்பெனியின் முழு பொறுப்புகளையும் கே.சி.வீரமணி பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து கனடாவில் உள்ள சகோதரி தன்மானம் தனது தம்பி ேக.சி.வீரமணிக்கு, வெளிநாட்டில் இருந்து மோட்டார் ைசக்கிள் வாங்கி அனுப்பியுள்ளார். அப்போது குடும்பம் வறுமையில் இருந்ததால், அந்த மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்.

இதற்கிடையே சின்னராசு மறைவிற்கு பின்னர், சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.சி.அழகிரி தனியாக பிரிந்து சென்றுவிட்டார்ர். கே.சி.வீரமணியே பீடிக்கம்பெனியை முழுவதும் நிர்வகித்து வந்தார். நிர்வாக திறமையின்மை காரணமாக பீடி கம்பெனி திவாலானது. இதற்கிடையில் அதிமுக விவசாய அணி பொறுப்பு வகித்தார். 1995ம் ஆண்டு ேஜாலார்பேட்டையில் அதிமுக ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். ேஜாலார்பேட்டை ஒன்றிய துணை சேர்மன் பதவியிலும், பின்னர் ேசர்மேனாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பின்னர் விவசாயப்பிரிவு மாவட்ட செயலாளராகவும், தற்போது வரையில் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக ஆனார். கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்தார். 2016ம் ஆண்டு மீண்டும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அமைச்சர் பதவி செல்வாக்கை பயன்படுத்தி, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நட்சத்திர ஓட்டல், பேரணாம்பட்டில் வேளாண்மை கல்லூரி, சென்ைன, பெங்களூரு, ஓசூர் என்று பல்வேறு இடங்களில் சொகுசு பங்களாக்களையும் ஓட்டல்களையும் கட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரர் எழிலரசன் மூலம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளார். வீரமணியின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இனியவன், யாழினி என்று ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்தநிலையில் அருகில் உள்ள மோட்டுசக்கர குப்பத்தை சேர்ந்த பத்மாசினி என்பவரை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு முதல் மனைவி பிரிந்து இருந்தார். 2வது மனைவிக்கு அகல்யா என்ற மகள் உள்ளார். இவர்களது ெபயரிலும் சொத்துக்களை பல்வேறு இடங்களில் வாங்கி குவித்துள்ளார். வீரமணி அமைச்சரானதும் முதல் மனைவி மீண்டும் வந்து கணவருடன் சேர்ந்துவிட்டார். இதற்கிடையே 2வது மனைவி பத்மாசினி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்படி பதவியை வைத்து உள்நாடு, வெளிநாடு என்று சொத்துக்கள் குவித்து வளர்ச்சியை கண்டுள்ளார். கட்சியில் ஜால்ராக்களை உடன் வைத்துக்கொண்டு, அவர்களை பினாமிகளாக்கிக்கொண்டு, மூத்த அரசியல் நிர்வாகிகளை ஓரம்கட்டினார்.

ஆரம்ப கட்டத்தில் பீடித்ெதாழிலாளியாக இருந்த மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி, தற்போது பலகோடிகளுக்கு அதிபதியாக மாறியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்று 2 மாநிலங்களிலும் 35 இடங்களில் ரெய்டு நடத்தி சொகுசு கார்கள், அமெரிக்க டாலர்கள், பலகோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் என்று பறிமுதல் செய்து விசாரணை தொடர்கிறது.

மாமனார் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் முதல் மனைவி மணிமேகலையின் தந்தை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவுக்குட்பட்ட குருவிமலையை சேர்ந்த பழனி(72). இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இவர் தனது ஒரே மகளான மணிமேகலையை கே.சி.வீரமணிக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், பழனியின் மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் பழனி தனியாக வசித்து வருகிறார். தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இதனால் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டுக்கு வந்தபோது, வீடு பூட்டியிருந்தது. எனினும் பழனியின் தம்பிகள் ராமலிங்கம்(69), கார்த்திகேயன்(65) ஆகியோர் அருகிலேயே வசித்தனர். இதன்பின், கார்த்திகேயன் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று இரவு 8.30 மணி வரை சோதனை நடத்தினர். அப்போது கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், வங்கி கணக்கு புத்தகம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இவர்களில், கார்த்திகேயன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி அமைப்பாளராகவும், குருவி மலை ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் போட காசில்லாமல் இருந்தவர்
ஆரம்பத்தில் திராவிட கழகத்தில் அரசியல்  வாழ்க்கையை தொடங்கிய கே.சி.வீரமணி,  அதன்பின்னர் அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.  2004ம் ஆண்டு விவசாய அணி பொறுப்பு வகித்தார். அதிமுகவில் சேர்த்ததுடன் இந்த பொறுப்பையும் வாங்கி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன். பின்னர் அவரையே ஓரம்கட்டி கட்சியில் அதிகார பலத்துடன் வலம் வந்தார். அப்போது, பச்சை நிற கார்  ஒன்றை வாங்கினார். அந்த காருக்கு பெட்ரோல் போடவும் காசு இல்லாமல் பாதி  வழியில் கார் நின்றுவிடும். இப்ேபாதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  பெட்ரோல் பங்கில், கே.சி.வீரமணி பெட்ரோல் போட்ட கடன் உள்ளதாம்.

சிறுவயது முதலே கார் பிரியர்
மாஜி  அமைச்சர் கே.சி.வீரமணி சிறுவயது முதலே கார் பிரியர். எனவே தற்போதுள்ள  ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் 9  சொகுசு கார்களை வாங்கி  அழகுபார்த்துள்ளார். அதோடு ெசன்னை, ெபங்களூருக்கு செல்வதற்கு சொகுசு  கார்களைத்தான் பயன்படுத்துவாராம். சமீபத்தில் அவரது 2வது மனைவியின் மகள் அகல்யா பெயரில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

Tags : Star Hotel ,Agricultural College ,KC Veeramani , Star hotel, college of agriculture,, luxury bungalow, Beaty worker, KC Veeramani
× RELATED குருங்குளம் ஊராட்சியில் ஈச்சங்கோட்டை...